WELCOME HOME X-MEN & FANTASTIC FOUR
1. வருஷம் 1995-96. மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் கடும் நிதித் தட்டுப்பாட்டால் அவதிக்கு உள்ளானது. காமிக்ஸ் விற்பனைகள் பெரும் அளவில் குறைந்தன. உலக வங்கிகளில் மார்வெல் தொடர்புடைய பங்குகள் சரிவை சந்தித்தன. வேறு வழியே இல்லாமல், தங்கள் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பலவற்றை வேறொரு நிறுவனங்களுக்கு விற்று கடன்களை அடைக்கத் தொடங்கியது Marvel.
1. வருஷம் 1995-96. மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் கடும் நிதித் தட்டுப்பாட்டால் அவதிக்கு உள்ளானது. காமிக்ஸ் விற்பனைகள் பெரும் அளவில் குறைந்தன. உலக வங்கிகளில் மார்வெல் தொடர்புடைய பங்குகள் சரிவை சந்தித்தன. வேறு வழியே இல்லாமல், தங்கள் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பலவற்றை வேறொரு நிறுவனங்களுக்கு விற்று கடன்களை அடைக்கத் தொடங்கியது Marvel.
2. X-men, Spider-man, Fantastic Four, Blade, Daredevil ஆகியன மார்வெல் வசமிருந்து மற்ற பெரும் நிறுவனங்களுக்கு சென்றது. குறிப்பாக மார்வெல்லின் முக்கியப் பாத்திரங்கள் X-men & Fantastic Four ஆகிய இரு பெரிய உரிமத்தை, 21st Century FOX எனும் நிறுவனத்திற்கும்; Spider-Man உரிமத்தை COLUMBIA நிறுவனத்திற்கும் உச்சத் தொகைக்கு மார்வெல் விற்றது.
3. 'FOX' நிறுவனம் தாம் உரிமம் பெற்ற பாத்திரங்களைக் கொண்டு , 2000ம் ஆண்டு வெளியிட்ட படம் X-MEN. நவீன உலகின் முதல் சூப்பர்ஹீரோக்கள் team-up படம். விமர்சகர்கள் மத்தியிலும், காமிக்ஸ் விரும்பிகள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் X-Men பெரும் வெற்றி. X-men முதல் படத்தை தொடர்ந்து FOX இதுவரை XMEN தொடர்பான 9 படங்களை 2017 வரை வெளியிட்டு உள்ளது. FANTASTIC FOUR தொடர்பாகவும் 3 படங்கள்.
- X-Men (2000)
- X2 (2003)
- X-Men: The Last Stand (2006)
- X-Men Origins: Wolverine (2009)
- X-Men: First Class (2011)
- The Wolverine (2013)
- X-Men: Days of Future Past (2014)
- Deadpool (2016)
- X-Men: Apocalypse (2016)
- Logan (2017)
- Fantastic Four (2005)
- Fantastic Four: Rise of the Silver Surfer (2007)
- Fantastic Four (2015)
4. இதில் X2, First Class, The Wolverine, Days of Future Past, Deadpool, Logan மட்டுமே வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற படங்கள். The Last Stand, Wolverine Origins, Apocalypse, Fantastic Four (2005, 2015), Rise of the Silver Surfer ஆகிய ஆறு படங்கள் பெரும் தோல்வி. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வரும் பல பெரிய கதாபாத்திரங்களின் கதை அமைப்புகள், ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல வருடங்களாக ரசித்து வந்த தங்களது பிடித்தமான ஹீரோக்களான Wade Wilson, Cyclops, Jean Grey, Apocalypse, (முக்கியமாக ஒட்டு மொத்த Fantastic Four பாத்திரங்கள்), போன்றோருக்கு திரையில் பெரும் அவமதிப்பு செய்து விட்டதாக இணையத்தில் பெரும் போராட்டமே நடத்தத் தொடங்கினர் ரசிகர்கள்.
5. இந்த கதாபாத்திரங்களின் உரிமங்களை மீண்டும் Marvelஇடமே திரும்ப கொடுக்கச் சொல்லி வெறுப்பின் உச்சத்திற்கு சென்றனர். FOX நிறுவனம் போலவே, Spider-man உரிமம் பெற்ற SONY நிறுவனம்- இரண்டு முறை ரசிகர்களுக்கான ஸ்பைடர்மேன் படத்தை 2012, 2014ல் (The Amazing Spider-man) கொடுக்கத் தவறி, எதிர்ப்பு வலுக்கவே, வேறு வழியில்லாமல் உரிமத்தை marvel நிறுவனத்துடன் பங்குப்போட்டுக் கொண்டு ஸ்பைடர்மேன்னை அவெஞ்சர்ஸ் உடன் இணைத்து ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017) கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்த மொத்த ஸ்பைடர்மேன் வரலாற்றையும் எனது முந்தைய பதிவில் காணலாம்: Link: https://www.facebook.com/MediaCreekMC/posts/511454545728795:0
6. SONY எடுத்த தெளிவான முடிவை போலவே FOX நிறுவனமும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என FOXற்கு நெருக்கடி வலுத்தது. மாதங்கள் செல்லச்செல்ல வேறு வழியில்லாமல் இரண்டு வாரத்துக்கு முன்பு Marvel நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது FOX.
7. இந்த விஷயம் நெட்டில் கசியவே ரசிகர்கள் யாவரும் பல விதமாக மார்வெல்லின் அடுத்த அத்தியாயத்தை யூகிக்கவும் அனுமானிக்கவும் தொடங்கினர். எல்லா அனுமானங்களையும் உண்மையாக்குவதை போலவே இருந்தது பேச்சுவார்த்தையின் முடிவு.
![]() |
2oth Cetury Fox is owned by 21st Century Fox |
8. Disney நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூன்று நாட்கள் முன்பு இதற்கான அறிக்கையை விட்டது. 52 Billion அமெரிக்கா டாலர் டீலில் தாங்கள்; FOX நிறுவனத்தின் படங்கள், டிவி தொடர்கள், டிவி சேனல்கள், பாக்ஸ் துணை நிறுவனங்கள் அனைத்தையும் விலைக்கு வாங்குவதாக அறிவித்தது. என்டேர்டைன்மெண்ட் உலகத்தின் மாபெரும் வரலாற்று செய்தியாகியது. பாக்ஸ் இப்படி ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கப்படும் என ஒருவரும் நினைக்கவில்லை.
9. காமிக்ஸ் திரைப்பட உலகிற்கு இச்செய்தி ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால் நினைத்து பாருங்கள், வெறும் தோர் மற்றும் ஐயன்மேன் உடனாகவும், எதிராகவும் சண்டையிட்ட ஹல்க் இனி wolverine உடன் சண்டையிடலாம். Magneto & X-MEN இனி அவெஞ்சர்ஸை எதிர்த்து போரிடலாம். Deadpool, ஸ்பைடர்மேனைக் கேலி/கிண்டல்/ragging செய்யலாம். இவை எல்லாம் காமிக்ஸ் புத்தகத்தின் சிறப்பான பக்கங்கள். இனி இவற்றை திரைப்படங்களில் திரையரங்குகளில் விசில் அடித்து கொண்டாடி ரசிக்கலாம்.
Deadpool & Spiderman funny: https://youtu.be/njgqALr080U
10. கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக இந்தியர்கள் நமக்கு இது எக்ஸ்ட்ரா நற்செய்தி. இந்தியா முழுக்க 69 சேனல்கள் கொண்டு இந்திய டிவி உலகின் மன்னனாக இருக்கும் STAR INDIA நிறுவனமும் இப்பொழுது FOX கட்டுப்பாட்டில் இருந்து DISNEYயிடம் சென்றுவிட்டது. இதனால் ஐபில் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை இனி STAR வாயிலாக DISNEY பெறும். அவெஞ்சர்ஸ் படங்களின் விளம்பரங்கள் STAR VIJAYயிலோ, ஐபில் போட்டிகளிலோ இனி காண முடியும். ஆசியா கண்டத்தின் இரண்டாம் மாபெரும் மீடியா மார்க்கெட்டாக இந்தியா உள்ளமையால் இனி அவெஞ்சர்ஸ் படங்களின் பிரீமியர் காட்சிகள் உலகிலேயே இங்கே முதலில் ரிலீஸ் ஆகலாம். அவெஞ்சர்ஸ் நடிகர்கள் இனி நேராக இந்தியா வரலாம். சுருக்கமா, ஹாலிவுட் இனி இந்தியாவிற்கு கூட்டமாக வரும்.
11. அடுத்த வருடம் வெளியாகும் AVENGERS: இன்பினிட்டி வார் மூலம் நாம் இது வரை பார்த்த அவெஞ்சர்ஸ் அத்தியாயம் முடிவிற்கு வருகின்றது. நாம் ரசித்த பல அவெஞ்சர்களுக்கு இதுவே கடைசி படமாக அமையலாம். முக்கியமாக கேப்டன் அமெரிக்கா, ஐயன் மேன், தோர் போன்றோருக்கு நிச்சயம். இவர்கள் இல்லாத அடுத்த கட்ட அவெஞ்சர் படத்திற்காக வந்த வரமே இந்த FOX & MARVEL ஒன்றான செய்தி. இவர்களின் இடத்தை இனி FANTASTIC FOUR ஹீரோக்கள் நிரப்பலாம்.
12. இதுவரை வந்த X-Men படங்கள் வேறு ஒரு இணை பிரபஞ்சத்தில் (Parallel Universe) நடப்பதாகவும், அவெஞ்சர்ஸ் படங்கள் நமது பிரபஞ்சத்தில் நடப்பதாகவும் வைத்து கொண்டு, Doctor Strange மூலம் இந்த இரண்டு பிரபஞ்சத்தையும் Avengers-4 படத்தில் ஒன்றிணைக்கலாம். டிஸ்னி படங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே உருவாக்க படுவதால் Deadpool படங்களை தனி R-Rated (குழந்தைகளுக்கு அற்ற) படங்களாக வைத்து அப்பப்போ அவெஞ்சர்ஸ் உடன் சந்தித்து போவதாக கொண்டு செல்லலாம்.
13. ஏறுமுகம் மட்டுமே கண்டுச்செல்லும் மார்வெல்க்கு, Dinsey மற்றும் FOX இணைப்பு செய்தி அடுத்த 10 வருஷத்திற்கும் MARVEL/Disney தான் காமிக் படஉலகின் ராஜாக்கள் என்பதை இப்போதே நிரூபணம் செய்து விட்டது. DC comics/ Warner Bros., சீக்கிரம் தங்களது JUSTICE LEAGUE ஹீரோக்களை வைத்து பெரிய ஹிட் கொடுக்க திட்டம் வகித்தல் வேண்டும். இல்லையென்றால் Marvel படங்களின் வெற்றிகளை மனதில் கொள்ளாமல் தங்களுக்கென ஒரு புது பாதை அமைத்தல் சிறந்தது.