காமிக்ஸ் சார்ந்த சூப்பர்ஹீரோ படங்களின் பொற்கால ஆண்டாக 2016ஐ கூறலாம். காமிக் உலகத்தின் தல-தளபதிகளான MARVELம் DCம் போட்டி போட்டுக்கொண்டு திரைக்களத்தில் மோதத் தொடங்கி இருக்கும் இந்தத் தருணத்தில் ஒரு மாபெரும் சோகச் செய்தி ஏதுவாக இருக்குமானால் HUGH JACKMAN கடைசியாக ஒரு முறை ஏற்க போகும் WOLVERINE கதாபாத்திரம் பற்றியதாகத் தான் இருக்கும்.
2000ல் தொடங்கி இப்போ 2016வரை கிட்டதட்ட 16 வருடங்களாக தொடர்ந்து ஒரே ஆள் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்து, அதற்கு உயிர் கொடுத்து, அனைவரையும் தனது திரை ஆளுமையால் கட்டிப்போட்டவர், JACKMAN. எதற்கும் ஒரு முடிவு இருப்பதை போல், JACKMANன் WOLVERINEற்கும் வந்து விட்டது முற்று. 47 வயதாகும் JACK, இப்பொது படப்பிடிப்பில் இருக்கும் WOLVERINE சீரிஸின் 3ம் படத்துடன் அக்கதாப்பாத்திரத்துக்கு பிரியா விடைக் கொடுக்கிறார். அதான், ONE LAST TIME.
இப்போ அப்படத்தின் முதல் பார்வையையும் படத்தின் அதிகாரப்பூர்வ TITLEஐயும், JACK மற்றும் படத்தின் இயக்குநர் இருவரும் ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்கள். வெறும் 'LOGAN' என பெயரிடப்பட்டிருப்பது FANS இடையே ஏகோபித்த வரவேற்பைப் பெறவில்லை என தான் கூறவேண்டும்.
(முதல் பாகம்: "X-MEN ORIGINS: WOLVERINE"
இரண்டாம் பாகம்: "THE WOLVERINE"
இப்போ மூன்றாவது: "LOGAN"
படத்திற்கு படம், டைட்டில் சுருங்கிக் கொள்கிறது :D )

கூடவே, இயக்குனர் அவர்கள், படத்தின் திரைக்கதை படவத்தின் இரண்டாம் பக்கத்தினை onlineல் வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை கபாலி ரஜினி styleல் கூறுவதென்றால், 'சண்டைனா மயிர்கூச்செறிய, புவிஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட, கட்டிடங்கள் உடைய, கிராபிக்சில் கலக்கும் சண்டைன்னு நெனச்சியா..
ரத்தம் தெறிக்கும், உடல் சிதறும், எதிரி கதறும் WOLVERINEன் கோரத் தாண்டவம் டா'
காமிக்ஸ் விரும்பிகள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு WOLVERINE படமாக இது இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.
Teaser trailer ரிலீஸ் ஆகும்போது WOLVERINE பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன்.
#OneLastTime | #Wolverine | #HughJackman | #Logan | #2017March3rd | #XMen |